தமிழகத்தில் 717 TASMAC கடைகளை மூட உத்தரவு – முதலமைச்சர் விஜயின் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் வழிபாடு தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்த 711 மதுக்கடைகளை மூட முதல்வர் அதிரடி உத்தரவு வெளியிட்டார்.

 

தமிழக முதலைமைச்சராக திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றதும் மூன்று முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் முக்கிய ஒன்றாக கருதப்படும் போதை தடுப்பு பிரிவின் கீழ் கையெழுத்திட்டு சில அதிரடி முடிவுகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மது விற்பனை என்பது நீண்ட நாட்களாக செயல்பாட்டில் இருந்து வருகிறது, தமிழக அரசு 4,765 மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பல்வேறு மது கடைகள் பொது மக்கள் கூடும் இடங்களில் இருந்து வருகிறது. பல்வேறு தரப்பு கோரிக்கைகளும் கடந்த ஆட்சி காலங்களில் எழுந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே மக்களின் கருத்து, இந்நிலையில் முதல்வர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் அதிரடியாக வழிபாடு தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை உள்ள மது கடைகளை மூடும்படி உத்தரவிட்டார். இதன் ஆய்வில் சுமார் 717 மதுபான கடைகள் இயங்கி வருவதாக கண்டறியப்பட்டு அவை அனைத்தும் இரண்டு வாரங்களில் மூடப்படவேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கண்டறியப்பட்ட 717 மது கடைகளில் 276 கடைகள் வழிபாடு தளங்கள் அருகிலும் 186 கல்வி நிறுவனங்கள் அருகிலும் 255 கடைகள் பேருந்து நிலையம் அருகில் இருப்பதும்  குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் இந்த மது குறைப்பு நடவடிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மதுக்கடை மூடல் என்பது அதிகரிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பகவும் உள்ளது.