மறைமுகமாக தவெகவிற்கு வாழ்த்து சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற தவெகவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர். இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரை வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அண்டை மாநிலமான ஆந்திராவிலும் முதலமைச்சர் சந்திரா நாயுடு, மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், ஜகன் மோகன் ரெட்டி போன்றோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் திரையுலகிலும் சிவகார்த்திகேயன், விக்ரம், மற்றும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அரசியல் தலைவர்களில் உதயநிதி ஸ்டாலின், ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இந்நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருப்பது மறைமுகமான தவெகவுக்கான வாழ்த்துக்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.