திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 90,292 பேர் தரிசனம்! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தொடர்ந்து அதிக அளவில் தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. அக்டோபர் 4, 2026 அன்று ஒரே நாளில் 90,292 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 அக்டோபர் 4ஆம் தேதி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 90,292 ஆகும். அன்றைய தினம் 27,329 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
உண்டியல் காணிக்கை எவ்வளவு?
அன்றைய தினம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டதில் ரூ.4.61 கோடி வசூலாகியுள்ளது,
மேலும், அக்டோபர் 4ஆம் தேதி 4.36 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் 2.74 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுள்ளனர்.
அதே நாளில் அஸ்வினி மருத்துவமனையில் 4,174 பேர் சிகிச்சை அல்லது மருத்துவ சேவையைப் பெற்றுள்ளனர்.
திருமலையில் தற்போதைய நிலவரம்
அக்டோபர் 5ஆம் தேதி நிலவரப்படி, திருமலையில் 21 காத்திருப்பு அறைகள் நிரம்பியிருந்தன.
SSD டோக்கன் இல்லாமல் சர்வதரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சுமார் 8 முதல் 10 மணி நேரம் தரிசன நேரம் ஆகும் என TTD தெரிவித்துள்ளது.