பல ஆண்டுகளாக தொடரும் மின்வெட்டு: கிழக்கு தாம்பரம் மக்கள் வேதனை — புதிய TVK அரசு இதை கவனிக்குமா?

கிழக்கு தாம்பரம் பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சனைக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கணபதி காலனி, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, கண்ணகி தெரு, வால்மீகி தெரு, LIC காலனி, எம்.ஜி.ஆர் தெரு, காசியப்பர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக குடிநீர் மோட்டார் இயக்க முடியாத நிலை, மாணவர்களின் படிப்பு பாதிப்பு, வீட்டிலிருந்து பணிபுரியும் (WFH) ஊழியர்களின் வேலைகள் பாதிப்பு, முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை குறித்து புகார் அளித்தும், நிரந்தரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, புதிய TVK அரசு இந்த பிரச்சனையை கவனித்து, மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, பழைய மின்கம்பிகள், கேபிள்கள் மற்றும் மின்சாதனங்களை சரிசெய்து, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கிழக்கு தாம்பரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.