தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பேருந்து பயணிகளின் வசதிக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி அரசு பேருந்துகளில் மொபைல்
ஸ்பீக்கரில் பாடல், வீடியோ அல்லது ஆடியோ ஒலிக்க அனுமதி இல்லை.பாடல்கள் அல்லது வீடியோக்களை கேட்க விரும்பினால்
இயர்போன் அல்லது ஹெட்போன் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறை மற்ற பயணிகளுக்கு சத்தத் தொல்லை ஏற்படாமல், அமைதியான மற்றும் பாதுகாப்பான பயண சூழலை உருவாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து ஊழியர்களின் அறிவுறுத்தல்களை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைவரின் வசதியையும் கருத்தில் கொண்டு இந்த விதிமுறையை மதித்து ஒத்துழைப்போம்.