13/07/2026: சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் மாயமான பழக்கூடை – RPF நடவடிக்கை எடுக்காதது ஏன்?

13/07/2026 அன்று மதியம் சுமார் 3:45 மணியளவில், சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் நான் ரயிலில் எனது இளஞ்சிவப்பு பழக்கூடையை தவறவிட்டேன். அதில் வாழைப்பழம், பப்பாளி மற்றும் இனிப்புகள் இருந்தன.
உடனடியாக தாம்பரம் RPF-க்கு தகவல் தெரிவித்தேன். அவர் (Chennai Beach) நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டனர், அங்கிருந்து "ரயிலில் எந்தப் பழக்கூடையும் கிடைக்கவில்லை" என்று பதில் தெரிவிக்கப்பட்டது, பழக்கூடை ரயிலில் கிடைக்கவில்லை என்றால், அதை யாரோ எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியானால், இது திருட்டு சம்பவமாகக் இருக்கும் அல்லவா? அது அதிக பண மதிப்புள்ள பொருள் இல்லை என்பதால் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற உணர்வு ஏற்பட்டது.
ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையில் மட்டும் இல்லை. அது உரிமையாளருக்கு எவ்வளவு முக்கியம் என்பதிலும் உள்ளது.
ஒருவருக்கு சாதாரணமாகத் தோன்றும் ஒரு கூடை, இன்னொருவருக்கு அன்புடன் வாங்கிச் சென்ற பொருளாகவோ, குடும்பத்திற்காக எடுத்துச் சென்ற உணவாகவோ, மனதிற்கு மிகவும் மதிப்புள்ள உடைமையாகவோ இருக்கலாம்.
பயணிகளின் அனைத்து புகார்களும், பொருளின் விலையைப் பொருட்படுத்தாமல், சமமான அக்கறையுடன் கையாளப்பட வேண்டும். அதுவே பொதுச் சேவையின் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பயணியின் உடைமையும் அவர்களுக்கு மதிப்புமிக்கதுதான்.