தமிழ்நாட்டில் 214 கோயில்களில் அறங்காவலர் நியமனம் 2026 – தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 214 திருக்கோயில்களில் அறங்காவலர் பதவிக்கான நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் ஆன்மிக சேவையில் பங்காற்ற விரும்பும் தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து இணையதளம், நேரடி சமர்ப்பிப்பு அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பலாம்.  விண்ணப்பப் படிவம், கோயில்களின் பட்டியல் மற்றும் முழுமையான விவரங்களை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை:

  • அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ வழியாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • உதவி ஆணையர் அலுவலகங்களில் பெறலாம்.

  • ஆய்வாளர் அலுவலகங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

வயது தகுதி

விண்ணப்பிக்கும் நாளன்று விண்ணப்பதாரர் 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்

  • இந்து சமயத்தை பின்பற்றாதவர்கள்.

  • ஒழுக்கக்கேடு தொடர்பான குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள்.

  • ஏற்கனவே கோயில் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

  • தர்மகர்த்தா பொறுப்புகளை நிறைவேற்ற இயலாத உடல் அல்லது மனநல குறைபாடு கொண்டவர்கள்.

  • சம்பந்தப்பட்ட கோயிலின் கட்டளை அறங்காவலர்களாக இருப்பவர்கள்.

  • மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  1. 214 கோயில்களின் பட்டியலை பார்வையிடவும்.

  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தகுதியை உறுதி செய்யவும்.

  3. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

  4. தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.

  5. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 22.07.2026-க்குள் https://hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

214 திருக்கோயில்களுக்கான அறங்காவலர் நியமன அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் மற்றும் ஆன்மிக சேவையில் ஆர்வமுள்ள தகுதியான இந்துக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.