ஒரு வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்

ஒரு வாக்கு வித்யாசத்தில் தவெக வேட்பாளர் அதிரடி வெற்றி பெற்றார்.

 

பல இடங்களில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு சில தொகுதிகளில் தவெகவுக்கும் திமுகவுக்கும் கடும் போட்டி நிலவி வந்தது, இதில் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநிவாச சேதுபதிக்கும் திமுக வேட்பாளர் பெரியகருப்பனும் நீண்ட இழுபறி நிலவி வந்த நிலையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஸ்ரீநிவாச சேதுபதி வெற்றி பெற்றார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்ரீநிவாச சேதுபதி மொத்தம் 83375 வாக்குகளையும் பெரியகருப்பன் 83374 வாக்குகளையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக பாஜாகாவின் திருகுமரன் 29054 வாக்குகளை பெற்றார். முப்பது சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்குகளில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்ரீநிவாச சேதுபதி.