98-120 இடங்களை கைப்பற்றி தவெக ஆட்சி அமைக்குமா? - ஆக்ஸிஸ் மை இந்தியா

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 98 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றும் என ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்ட கணிப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 நடந்த சட்டமன்ற தேர்தல் திருவிழாவின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் பொது மக்களிடையே பேசுபொருளாகிவிட்டன. இதில் ஒவ்வொரு நிறுவனமும் அதற்கேற்ப கணக்கீட்டின் படி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன் படி ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி தவெக 98 முதல் 120 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன் பின் திமுக 92 முதல் 110 இடங்களையும் அதிமுக 22 முதல் 32 இடங்களைப் பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. 
பெரும்பான்மையான நிறுவனங்களின் முடிவுகள் திமுகவுக்கும், அதன்பிறகு அதிமுகவுக்கும் சாதகமாக இருக்கும் நிலையில், தவெக 35% வாக்குகளை பெறும் என்று ஆக்ஸிஸ் மை இந்தியா கூறியிருப்பது தவெக கட்சியினரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்வேறு தரப்புகள் இதை விமர்சித்தாலும், இதற்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் கணிப்புகளை இந்நிறுவனம் எந்த அளவிற்கு துல்லியமாக கையாண்டுள்ளது என்பதை 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் கணிப்புகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. அதில், 76 முதல் 90 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தது; அதுவும் நடந்தேறியது. இதில் 90.59 சதவீதம் துல்லியமாக கணித்தது இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. எனவே, 2026 ஆம் ஆண்டு ஆக்ஸிஸ் மை இந்தியா கணித்தது போல் தவெக ஆட்சியை பிடிக்குமா என்பது மே 4 ஆம் தேதியன்று தெரியவரும் என்பது அனைவரும் அறிந்ததே.