தமிழ்நாடு தேர்தல் 2026: தபால் மற்றும் EVM வாக்கு எண்ணிக்கை நேரம் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி 62 மையங்களில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் மற்றும் 8:30 மணிக்கு EVM.

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அனைவருக்கும் வாக்கு எண்ணிக்கை பணி எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது. இதுகுறித்து  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 23.04.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கட்கிழமை, அதாவது 04.05.2026 அன்று மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.
 காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும். முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் தொடங்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்குகள் ஒரு பகுதியிலும் மற்றும் EVM வாக்குகள் மற்றொரு பகுதியிலும் அதாவது தனித்தனியாக எண்ணப்படும் என்றும் இதற்க்கு தனி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், அரசு அலுவலர்கள் மற்றும் தேர்தல்  குழுக்கள் தபால் வாக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், 80 சதவீதம் தபால் வாக்கைப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், Form 12D விண்ணப்பத்தின் மூலம் சுமார் 1.73 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். மேலும், Service Voters அடிப்படையில் சுமார் 18,000 பேர்  தங்களது வாக்கைப் பதிவு செய்துள்ளார். இந்த அனைத்து வாக்குகளும் வரும் திங்கட்கிழமை 04.05.2026 அன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.