தாம்பரத்தை சுத்தமாக மாற்றுவாரா டி.சரத்குமார்? தவெக வெற்றிக்குப் பிறகு மக்கள் எதிர்பார்ப்பு

தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் வெற்றி பெற்றுள்ளார். அவர் கூறிய சுத்தமான தாம்பரம் கனவு நனவாகுமா? மக்கள் எதிர்பார்ப்பு

 

நடந்து முடிந்த 2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தவெக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் டி.சரத்குமார் அவர்கள் 118967 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் RS கிருத்திகா தேவி 83346 வாக்குகளும் மூன்றாம் இடத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் 61991 வாக்குகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. டி.சரத்குமார் அவர்கள் திமுக வேட்பாளரை விட 35621 வாக்குகள் அதிகம் பெற்றும், அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை விட 56976 வாக்குகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் சொன்னது போல் Clean தாம்பரமாக மாறுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.