EVMஇல் 11ஆம் இடம்… மக்களின் மனதில் 1ஆம் இடம் – வி. எஸ். பாபு வெற்றி!

EVM 11வது இடத்தில் இருந்தும் கொளத்தூரில் வி. எஸ். பாபு வெற்றி

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்றது, திமுக 59 தொகுதியிலும், அதிமுக 47 தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக கோட்டையாகக் கருதப்படும் கொளத்தூர் தொகுதியில் தவெகவின் வி. எஸ். பாபு வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது அக்கட்சியினர் இடையே பெறும் அதிரிச்சியைய் ஏற்படுத்தியிருந்தது. இருபத்திரண்டு சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் தொடக்க முதல் தவெகவின் வி. எஸ். பாபு முன்னிலை வகித்து வந்தார் பின்னர் கடைசி சுற்று முடிவில் தவெக 82997 வாக்குகளும் திமுக 74202 வாக்குகளும், அதிமுக 18430 வாக்குகளும் பெற்றன. இதில் வி. எஸ். பாபு அவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விட 8795 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். EVMஇல் நான்காம் பட்டியலிலிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கடந்து 11 ஆம் இடத்தில் இருந்த வி. எஸ். பாபுவுக்கு மக்கள் வாக்களித்து இருப்பது மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து இருக்காரர்கள் என்ற மனநிலையைக் காட்டுகிறது.