மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: மறந்த அரசியல் கட்சிகள் மீது மக்கள் கடும் கோபம்!

108 இடங்களில் வென்ற தவெகவை Single Largest Party ஆக ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து அரசியல் சர்ச்சை

 

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, “Single Largest Party” என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது குறித்து பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்ததால் அதன் தாக்கம் நாடாளுமன்ற அரசியலிலும் எதிரொலிக்கும் என்ற அரசியல் கணக்கீடுகளும் பாஜகவிடையே பேசப்பட்டு வருகின்றன. மக்களின் தீர்ப்பு தவெகவிற்கு சாதகமாக அமைந்திருப்பதை  ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது பொதுமக்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.மேலும், மக்களின் நலனுக்கான முக்கிய வாக்குறுதிகளை அடிப்படையாக வைத்து தவெகவுடன் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் முன்வராமல், பதவிகளை கேட்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்ற ஜனநாயக அடிப்படையை மறந்து, அரசியல் கட்சிகள் அதிகாரப் போட்டியில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் அதிகரித்து வருவதாக பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.